சந்தர்ப்பங்களை தவறவிடும் போக்கிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறாதிருப்பது கவலைக்குரியது – தோழர் ஜீவன்!
Wednesday, December 4th, 2019கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறான பார்வையில் பார்த்து தவறவிடும் சந்தர்ப்பவாத அரசியல் போக்கிலிருந்து எமது மக்கள் இன்னமும் மீட்சி பெறவில்லை என்பது வேதனையான ஒன்றாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
சுழிபுரம் பாண்டாவத்தை பகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் ஏதோ ஒரு அழுத்தங்கள் இருந்தமையால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் தமது எதிர்காலத்தை உறுதி செய்யமுடியாத நிலையில் இருந்தனர்.
ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலை இல்லாத போது கூட மக்கள் வதந்திகளுக்கும் சேறு பூசல்களுக்கும் எடுபட்டு சென்று இம்முறையும் தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாதவர்களாகிவிட்டனர். இதனால் எமது மக்களின் அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விதமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்வதிலும் தமிழ் மக்கள் மேலும் பின் தள்ளப்டும் நிலைக்கு வந்துள்ளனர்.
எமது தலைவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எம்மை நம்பங்கள்! நாம் செய்வோம்!! செய்விப்போம்!!! என்று தன்மீதுள்ள நம்பிக்கையை கொண்டே உங்களிடம் வாக்கு வழங்கும்படி கோரியிருந்தார்.
ஆனாலும் மக்கள் தவறான வதந்திகளுக்கு எடுபட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் இன்று மக்களை எதிராக வாக்களிக்க கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றைய அரசுடன் ஒட்டிக்கொள்ள படாத பாடு படுகின்ற நிலை காணப்படுகின்றது. இவர்ளை நம்பி வாக்களித்த மக்கள் மறுபடியும் நடு வீதியில் இருக்க வேண்டிய நிலை.
ஆனால் நாம் அவ்வாறு மக்களை தவறாக வழிநடத்துவதில்லை. எது சரியான பாதையோ அதைத்தான் மக்களுக்கு காட்டி நிற்கின்றோம். அது மட்டுமல்லாது எமது வழிமுறைதான யதார்த்தமானது என்றும் வரலாறு இன்று நிரூபித்துள்ளது.
அந்தவகையில் மக்களாகிய உங்களிடம் உங்கள் எதிர்காலம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். போலிகளுக்கும் அற்ப சொற்ப சலககைளுக்கும் எடுபடாது நம் கூறும் வழிமுறைக்கு வலுச் சேருங்கள். உங்கள் எதிர்காலத்தை நாம் வெற்றிகொண்டு தருவோம் என்றார்.
Related posts:
|
|