சத்துணவு வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பிக்கப்படும் – அரச அதிபர் வேதநாயகன் தெரிவிப்பு!

Saturday, February 18th, 2017

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் போசாக்கு இன்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் போசாக்கு குறைபாடான இடங்களை இனம் கண்டு அப்பகுதி மக்களின் போசாக்கு தன்மையை அதிகரிப்பது குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

போசாக்கு இன்மையினால் பாதிக்கப்பட்டவர்களை இனம்கண்டு உதவிகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களின் போசாக்கு இன்மையை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இக் கூட்டத்தின் மிக முக்கியமான கருப்பொருளாக காணப்பட்டது.

யாழ் மாவட்டதில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் சங்கானை ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகள் போசாக்கு குறைபாடுகள் உள்ள பிரதேசங்களாக இனம்காணப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களில் போசாக்கை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

article_1431079696-IMG1326

Related posts: