சதொச விலைக்கு கூட்டுறவு நிலையங்களில் பொருட்கள் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Thursday, March 3rd, 2022

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச விலைக்கே, கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் பொருட்களை  விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு உரிய விலையை விடவும் அதிக கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறப்பானது எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: