சதொச விற்பனை நிலையங்களில் விசேட உணவுப் பொதி விநியோகம்

தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாவனையாளர்களின் நலன்கருதி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விசேட உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த விசேட உணவுப் பொதியில் மொத்தமாக 1515 ரூபா பெறுமதியுள்ள உணவுப் பொதி, 975 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எதிர்வரும் 20ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 10 இலட்சம் பொதிகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் இலக்கு என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.பால்மா, அரிசி, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் உட்பட பத்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இதில் அடங்கும் என்று சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!
அரச வைத்திய சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!
பேர்ல் கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
|
|