சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!
Friday, March 26th, 2021அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சதொசவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோருக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
000
Related posts:
2018 ஆளுநர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
300 எக்கர் நிலப்பரப்பில் புதிதாக நெற்செய்கை!
ஒக்டோபர்முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|