சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அமைச்சர் பந்துல குணவர்தன!
Saturday, May 29th, 2021சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி வெள்ளை நாட்டு அரிசி, சிவப்பு அரிசி, கோதுமை மா, பருப்பு, நூடில்ஸ்,சீனி, 200 கிராம் கருவாடு, 100 கிராம் தேயிலை, ஒரு பக்கெட் உப்பு மற்றும் முக்கவசம் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
வடக்கின் அரச சித்த மருத்துவர்கள்- பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்!
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர...
கொழும்பு நினைவேந்தல் தேவையற்றது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கருத்து!
|
|