சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் – நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, September 24th, 2021

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவரைச் சந்தித்து சதொச ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாக நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது அதற்கான அனைத்து ஆவணங்களையும் தான் தயார் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பாக ஜனாதிபதியிடம் எழுத்துபூர்வமாக அறிக்கையை முன்வைத்த பின்னர் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடையும் என்றும், ஊழல் மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: