சதொசவில் நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும் – பல பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022

நுகர்வோர் நியாயமான விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரேயொரு விற்பனை நிலையமாக சதொச வலையமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட பல பொருட்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சதொச நிறுவனம் போத்தல் குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், சலவைத் தூள், சவர்க்காரம் மற்றும் பல பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சதொச விற்பனை நிலையங்கள் சுற்றுச்சூழ லுக்கு உகந்த SLS சான்றளிக்கப்பட்ட தண்ணீர் போத்தலை 35 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும், அந்தப் போத்தலை திருப்பிக் கொடுத்தால், வாடிக்கையாளருக்கு 10 ரூபா திரும்ப வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்காக சதொச நிறுவனத்தினால் போத்தல் குடிநீர் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: