‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Thursday, September 2nd, 2021

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கமைய இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாடுமுழுவதிலுமுள்ள அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சதொச கிளைகளை திறந்து வைப்பதன்மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: