சண்கிளாஸ் மற்றும் புர்கா அணிந்து வாக்களிக்க தடை விதிப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முழுமையாக முக மூடி அணிந்து வாக்கு நிலையத்திற்கு வருகை தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகதேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி முழுமையாக முகத்தினை மூடிய வண்ணம் புர்கா அணிந்து வரல் சன்கிளாசஸ் அணிந்து வருகை தரல் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றுக்குமுழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாக்காளர்களும் வாக்கெடுப்பு நிலையத்திற்கு வருகை தரும் போது தங்களது அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டியதோடு வாக்கெடுப்புநிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்களது பணியினை தொடர ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தடைகளை மீறி வாக்கெடுப்பு நிலையத்தில் குழப்பங்களை விளைவிக்க முயன்றால் அவர்களை திருப்பி அனுப்பவும் நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணையகம் தெரிவித்துள்ளது
Related posts:
|
|