சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் மன்னாரில் கைது !

Monday, April 25th, 2022

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் செல்ல முற்பட்டதாக பேசாலைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் என சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மன்னார் நீதவான் ஏ.எச்.ஹைபத்துல்லாஹ் அவர்கள் மூவரையும் தலா 50,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 60 க்கும் மேற்பட்டோர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: