சட்டவிரோத மீன்பிடிவிவகாரம்: முற்றுகை போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்!

Thursday, June 7th, 2018

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் வேற்றிட மீனவர்களால் உருவான பிரச்சினையை அடுத்து அத்துமீறி தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் ஒழுங்கமைப்பில் நாளை மறுதினம் முற்றுகை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கிழக்கு பகுதியில் அத்துமீறி தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றாமையினை கண்டித்து நேற்றுகாலை நடைபெற்ற கண்டனப் போராட்டத்தின் பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இழுபறிகளுக்கு பின்னர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசம் இணக்கம் தெரிவித்திருந்தது,

இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

34610539_1685984868184377_848182017198653440_n

34416324_1685984804851050_9203590852008476672_n

Related posts: