சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!
Wednesday, January 26th, 2022கிளிநொச்சி – கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைதுசெய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
நாட்டில் நேற்று 2,289 பேருக்குக் கொரோனா தொற்றுதி - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெர...
நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தம் – நடைமுறைக்கு வருகிறது இ-பில் அல்லது குறுஞ்செய்தி - நீர் ...
|
|