சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை நிரூபிககப்படவில்லை -அமைச்சர் திலக் மாரப்பன 

Friday, September 22nd, 2017


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய  சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை நிரூபிககப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் திலக் மாரப்பன நாடாளுமன்றத்தில்   தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு   எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி      பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன  இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாகும். ஜனாதிபதியும், அரசாங்கத்தின் கொள்கையை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  சாட்சியங்கள இல்லை. இதனால் அதற்காக வழக்குத் தொடுக்கவும் முடியாது என்று வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் திலக் மாரப்பன மேலும் கூறினார்.

 

Related posts: