சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க  கால அவகாசம்!

Thursday, April 21st, 2016

‘சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை திருப்பி மீளளிப்பதற்கான பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மே மாதம் 06ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது’ என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார் ‘

இக்காலத்தில் தம்மிடம் இருக்கும் துப்பாக்கிகளை திருப்பி கொடுப்போருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பனவுகள் வழங்கப்படும். பொது மன்னிப்பு காலத்துக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் அதனையடுத்து முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: