சட்டவிரோத கூரிய ஆயுதங்கள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு!

Monday, May 6th, 2019

சட்டவிரோத வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்காக கடந்த சனிக்கிழமைமுதல் இரண்டு நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று(06) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மேலும் 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் - மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய...
அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்...