சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

சட்டவிரோதமான முறையில் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் மக்களிடையே பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்களும் இருப்பது தொடர்பிலான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கடந்த 17ஆம் திகதி 12:30 மணிக்கு தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பல பகுதிகளில் மின்சாரம் மாத்திரமின்றி நீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து சுமார் 8 மணித்தியாலங்களுக்கு பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியதைத் தொடர்ந்து நீர் விநியோகமும் வழமைக்கு திரும்பியதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்தது
எவ்வாறாயினும், மின் துண்டிப்பு ஏற்பட்ட தினத்தில் இருந்து இன்று வரையில் தங்களது பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடை சீர் செய்யப்படவில்லை என களனி-பெதியாகொட- களனி ஆற்றிற்கு அருகே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் உள்ள சுமார் 200 குடும்பங்கள் கடந்த 17 ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறு குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|