சட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களத்திற்கு சீல்!
Friday, April 13th, 2018யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மாட்டிறைச்சிக் கடைக்கு அருகில் நீண்ட காலமாக அனுமதியின்றி மாடுகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டடம் சாவகச்சேரி நகரசபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இயங்கி வரும் இறைச்சிக் கடைக்கு அருகில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைக்கு சென்றபோதுஅங்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி வெட்டப்பட்டமைக்கான சான்றுகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் அவதானித்தனர்.
இதனையடுத்து இறைச்சி கடையை இயக்கி வந்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின்உறுப்பினர்கள், சுகாதார பிரதிநிதிகள் பொலிசார் நேரில் சென்று பரிசோதனை செய்து சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறப்பு!
மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!
அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்!
|
|