சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் எம்மிடம் பிடிபடாமல் ஒளிந்திருக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும்.

அந்தவகையில் உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு  தெரிந்தவர்களோ இவ்வாறானவிடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது காவல் துறையினருக்கு அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:


பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் - இலங்கைக்கான ...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன - பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை ...
இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான இந்திய...