சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, March 7th, 2021மாகாணசபை தேர்தல் தொடர்பில் தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணாகசபை தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறுபட்ட விவாதங்கள் தற்போது எழுந்துள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதேநேரம் மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படி எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியின் விருப்புடன் அமைச்சு பதவியில் மாற்றம் வருமானால் ஏற்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
ஆபத்தான நாடாக இலங்கை!
தனது சாதனையை முறியடித்த இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் - ஜனாதிபதி ரணில் பாராட்டு!
|
|