சட்டப்படி வேலை செய்யும் ஆசிரியர்கள் !

Thursday, February 27th, 2020

6 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இன்று (27) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதேபோல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றியளித்தாகவும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts: