சட்டத் திருத்தம் தொடர்பில் தமிழகம் எதிர்ப்பு!

Sunday, January 28th, 2018

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு படகுகளுக்கான அபராதம் அதிகரிக்கப்படுகிறது.

இதற்கான சட்டத்திருத்தம் கடந்த தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இந்த சட்டத்திருத்தத்தை மீளப்பெற செய்ய வேண்டும் என்று அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.

Related posts: