சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் – 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெபரல்!

19ஆம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் என இலங்கையின் முன்னிலை தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் 19ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டுக்கு அது பொருத்தமாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
19ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யாது அதில் திருத்தங்களைச் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நல்ல அரச ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு 18 மற்றும் 19ஆம் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென நேற்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, 19ஆம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
அரிசி இறக்குமதி தீர்மானத்திற்கு விவசாயிகள் அதிருப்தி!
வலி தெற்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆராய்வு!
பிரான்ஸின் நிலைமையை புரட்டிப் போட்ட கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 588 பேர் பலி!
|
|