சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டும்- அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

சட்டம் ஒழுங்கு ஆகியனவற்றைப் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களையும், போதைப் பொருளையும் கட்டுப்படுத்த உச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவரது அமைச்சில் அமைச்சின் செயலாளர் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக இதுவரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் துறைமுகம், தெற்கு, மேல், கரையோரப் பிரதேசங்கள் ஊடாக நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் உரியநடவடிக்கையை எடுத்துள்ளனர். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரகூறினார்.
Related posts:
|
|