சட்டங்களை மீறி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் !

பொதுத் தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகத் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலின் போது, தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான ஆலோசனைகளை அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளதுடன் அதற்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் அரசுடைமை!
எரிபொருள் விலையை குறைக்க எந்த வழியும் இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்...
யாழ்ப்பாணப் பல்கலையில் வடக்கு மாகாண நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!
|
|