சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
Monday, December 18th, 2017கடந்த 4 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
தவசிக்குளம் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த கணபதி செல்வராசா (வயது – 56) என்ற முதியவரே காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர் ஆவார். இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உறவினராக தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.வசந்தா என்பவரின் பெயரைப் பதிவு செய்திருந்தார். கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோதும் உறவினர்கள் யாரும் இவரை வந்து பார்த்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
இம் மரணம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உயிரிழந்த முதியவர் தொடர்பில் யாராவது இருப்பின் சடலத்தை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கின் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடிவு!
பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை - வர்த்தக அமைச்சர் அறி...
ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் அக்கிராசன உரையில் ஜனாதி...
|
|