சங்குவேலியில் வாள் வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

Thursday, August 18th, 2016

வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த இளம் குடும்பஸ்தர் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த ஐவர் கொண்ட குழு சராமரியாக வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) இரவு-10 மணியளவில் யாழ். சண்டிலிப்பாய் சங்குவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முன்பகை காரணமாகவே இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும், குறித்த குடும்பஸ்தருக்கும் இடையிலிருந்த முன்பகையின் காரணமாக நேற்று புதன்கிழமை இரவு வீடு புகுந்து வெட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்  தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய  நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றிக் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது -35) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: