சங்கா மற்றும் மஹேலவிற்கு அழைப்பு விடுத்துள்ள விளையாட்டுத்து துறை அமைச்சர்!!

Thursday, August 20th, 2020

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக இணைய விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய விளையாட்டு ஆலோசனை குழுவின் புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விளையாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இருவரும் 1973ம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் (பிரிவு 25 பிரிவு 4) இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

நாட்டில் விளையாட்டுகளை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வது தொடர்பான விடயங்களில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” என கூறியுள்ளார்.

இதேவேளை, சங்கக்கார மற்றும் ஜயவர்தன தவிர, இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள வல்லுநர்கள் பலர் இந்த குழுவில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சேரும் குப்பைகளை அகற்றப் போதிய வாகன வசதிகள் இல்லை:...
நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!
மீளாய்வு என்ற போர்வையில் ஏற்கனவே மக்கள் விருப்புகளின்றி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் உறுதிப்படுத்து...