சங்காவிடம் கிரிக்கெட் சபையை கையளிக்க தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் சபையை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூடிய ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவிலேயே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அல்லது அமைச்சரவையில் முன்மொழிவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரின் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக் கிரிக்கெட் சபை பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
மீன் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அவன்காட் விவகாரம் - தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது!
நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி - வலு சக்தி அமைச்சு அறிவிப்...
|
|