சங்கானை வைத்தியசாலையில் அபாயம் :  நான்கு உத்தியோகத்தர்கள் டெங்கு நோயால் அவதி!

Friday, November 24th, 2017

சங்கானை அரசினர் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர் இனங் காணப்பட்டமையை தொடர்ந்து இந் நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ள சுகாதாரப் பிரிவினர் வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிகளில் புகையூட்டல் போன்ற தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் உள்ள சங்கானை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந் நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் வைத்தியசாலையிலும் சுற்றுப் புறங்களிலும் புகையூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சுகாதாரப் பிரிவினர் வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நுளம்பு கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட கிராமங்களில் 1,200 க்கும் அதிகமான வீடுகளில் இரு தினங்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 200 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு நோட்டிஸ் வழங்கப்பட்டதுடன் குடம்பிகள் காணப்பட்ட 6 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதாரப் பகுதியினரால் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.  அதேநேரம் இப்பிரதேசத்தில் உள்ள 14 பாடசாலைகளில் தரம் 6 இல் கல்வி கற்கும் 200 மாணவிகளுக்கு கருப்பைக் கழுத்து புற்று நோய் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

Related posts: