சங்கத்தானையில் புகையிரதம் மோதிக் குடும்பஸ்தர் உயிரிழப்பு  

Saturday, July 29th, 2017
யாழ். சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.  மேற்படி விபத்துச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல்-02.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது  குறித்து மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரியிலுள்ள தனது உறவினர் வீடொன்றுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் போது குறித்த பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்டுள்ளார். அச்சமயத்தில் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதிப் புகையிரதத்துடன் மோதுண்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் சிவச்செல்வன்(வயது- 59) என்பவரே சம்பவத்தில் பலியானவராவார்.  சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: