சகல பெண்களுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

Saturday, March 10th, 2018

நாட்டை அமைதியும் ஒற்றுமையும் நிறைந்ததாகக் கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிக்க சகல பெண்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல இன மக்களும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் பங்களிப்பு வழங்குவதே தாய்மையை அடிப்படையாகக் கொண்ட பெண்கள் சமுதாயத்தின்தற்போதைய கடமையாக உள்ளது.

தாய்மை மற்றும் பெண்களின் உரிமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றுகின்றது. இதனடிப்படையில் பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டியகௌரவத்தினையும் மதிப்பினையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் சமூகத்தின் சகல அங்கத்தவர்களும் தமது பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: