சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன – இலங்கை துறைமுக அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, May 3rd, 2022

நாடளாவிய ரீதியாக உள்ள சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோல மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் தெற்காசிய நுழைவாசல் இறங்குதுறை, சர்வதேச கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஜெயா கொள்கலன் இறங்குதுறை என்பன வழமைபோல கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, துறைமுக தொழிலாளர்கள் கடமைக்கு வரும் வகையில், துறைமுகங்களுடனான போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: