சகல சௌபாக்கியங்களையும் அருளும் நவராத்திரி விழா இன்று ஆரம்பம்!

இன்றுமுதல் நவராத்திரி விரத காலம் ஆரம்பித்துள்ளது. மும்பெரும் தேவிகளான அலைமகள், மலைமகள், கலைமகள் முறையே தொடர்ந்து 9 நாட்கள நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது.
பத்தாவது நாளான விஜயதசமி தினத்தன்று அம்பாள் மகிக்ஷாசுரன் எனும் அரக்கனை கொன்ற நாளாக கருதப்படுகின்றது. உலங்கெங்கும் வாழும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் நவராத்திரி விரதமும் ஒன்றாகும்.
சிவனை வழிபட ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’ என்பது ஆன்றோர் வாக்கு.
அந்தவகையில் ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சௌபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும் என கூறப்படுகின்றது.
நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் அனைவரும், விரதம் இருந்து கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம் என கூறப்படுகின்றது.
நவராத்திரி பூஜையின் ஒன்பது நாட்களும், ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை காண்பவர்களுக்கு, நவராத்திரி பூஜை செய்ததற்கான பலன் முழுமையாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாள் ஒரு சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரியின் அனைத்து நாட்களிலும், அம்பாளை சிறப்பிக்கும் வகையிலான பாடல்களில் ஒன்றையாவது பாட வேண்டும்.
நவராத்திரி நாட்களில் பகல் வேளையில் சிவபெருமானையும், இரவு நேரத்தில் அம்பிகையையும் பூஜை செய்வதே சரியான வழிபாடாகும்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவில்லாத பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
000
Related posts:
|
|