சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு – சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்சங்கத்தின் மாநாட்டில் பிரதமர்!

அதிகார பகிர்வுக்கு இடமளித்து சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் எட்டாவது மாநாட்டில் பிரதான சொற்பொழிவை நிகழ்த்தியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2030ற்குள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான களம் என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெறும் இந்த மகாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும்.
சகல கட்சிகளும் சேர்ந்து சகலரதும் கருத்துக்களை உள்வாங்கக் கூடிய அரசியல் யாப்பை உருவாக்குவது நோக்கமாகும். இதற்குரிய இடைக்கால குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்து கருத்து வெளியிடும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் இம்மாதம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இது எந்த வகையிலும் இறுதி ஆவணமாக மாட்டாதென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Related posts:
|
|