க.பொ.த பரீட்சைகளின் விடைத்தாள்களை பாடசாலை விடுமுறை காலத்திற்குள் திருத்தி முடிப்பதற்கு நடவடிக்கை- கல்வியமைச்சு!

Wednesday, May 30th, 2018

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை தொடர்ந்து அவற்றின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை பாடசாலை விடுமுறை காலத்திற்குள்ளேயே பூர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது பற்றி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ள தகவலில் கா.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளைத் தொடர்ந்து அவற்றின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதம் அடைவதால் பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடும் பணிகளும் தாமதமடைவதாகவும் இதனால் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளை உரிய காலத்திலேயே ஆரம்பிக்க முடியாத நிலமை ஏற்படுவதாகவும் இதனைத் தவிர்ப்பதற்காகவே க.பொ.த விடைத்தாள்களைத் திருத்தும் பணியை பாடசாலை விடுமுறை காலத்திற்குள்ளே பூர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் க.பொ.த பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் பாடசாலை விடுமுறை காலத்தில் நடைபெற்று பாடசாலை நாட்களிலேயே மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துவதற்காக பாடசாலை மூடப்படும் நாட்களை குறைப்பதற்கும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாடசாலை விடுமுறை நாட்களுக்குள்ளேயே விடைத்தாள்களைத் திருத்துவதன் மூலமும் அவ்வாறே ஏனைய சந்தர்ப்பங்களில் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக பாடசாலை நாட்கள் குறைப்பதன் மூலமும் பெறுபேறுகளை தாமதம் இன்றி வெளியிட முடியும் எனவும் இதனால் தொடர்ந்து வரும் பாடசாலை தவணை ஆரம்பத்திலேயே ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்கள் தமது அடுத்த வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிய தகவலை கடந்த 26 ஆம் திகதி நடந்த விசேட நிகழ்வொன்றில் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளதாக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: