க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விசேட வேலைத்திட்டம் நாளை!

Friday, November 18th, 2016

இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக அன்றையதினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஷேட ஒருநாள் சேவையை முன்னெடுக்க உள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சேவைக் கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படும் என்றும் அன்றைய தினம் பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயமல்ல என்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரியின் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைக்கான உரிய ஆவணங்களுடனும் வருகை தந்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விண்ணப்பித்துள்ள போதும் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள் மற்றும் சரியான ஆவணங்களை சமர்பிக்காத விண்ணப்பதாரிகள் ஆகியோரும் வரும் சனிக்கிழமை அடையா அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக 0112 86 22 17 மற்றும் 0112 86 22 28 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Dept

Related posts: