க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்!

Tuesday, January 26th, 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் அதன் பிரதியொன்றை அதிபரின் பரிந்துரையுடன் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை 0112 78 56 33, 0112 78 56 62 மற்றும் 0112 78 52 16 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: