க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Friday, March 1st, 2019இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஆட்பதிவு திணைக்களத்தில் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளுக்கு தேசிய அடையாள அட்டையினை விநியோகிக்கும் செற்திட்டம் ஆட்பதிவு திணைக்களத்தினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்று நிரூபத்தை கடந்த ஜனவரி மாதமளவில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் நாம் அனுப்பி வைத்துள்ளோம்.
எம்மால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்று நிரூபத்தை நன்கு அவதானித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டு தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறியத்தருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|