க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள்!

Monday, April 2nd, 2018

இன்று முதல் கடந்த வாரம் வெளியான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைக்காக ஒரு நாள் சேவையின் கீழ் இந்த சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.

கல்விப்பொதுத் தராதார சாதாரண தர பரீட்சை பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டுமென்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: