க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை பரீட்சைக்குத் தயார்படுத்தும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை நாளை 30ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் மே 15 வரை அமுலில் இருக்கும். , மேலும் இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மொழி உரிமை அமுலாக்கதில் உள்ள பிரச்சினைகள் குறித்து 24 மணிநேரமும் முறைப்பாடு செய்யலாம்!
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள கட்டணம்!
உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக சீனி விநியோகிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சு தெரிவிப்ப...
|
|