க. பொ. த சாதாரண தரத்தில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் மாணவி தற்கொலை!

Tuesday, April 4th, 2017

அண்மையில் வெளியான க. பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் யாழ். வேலணை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்று (03) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் அருட்பிரகாசம் ரேணுகா(வயது-16) என்ற மாணவியே வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவி வெளியான க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய ஒரு ஏ, ஒரு பி, 6 சி, ஒரு எஸ் சித்தி பெற்றுள்ளார் .

எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் பெறுபேறு வெளியான நாள் முதலே கவலையிருந்ததாகத் தெரியவருகிறது. இந்த நிலையிலேயே இன்றைய தினம் வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: