க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று !

Tuesday, May 4th, 2021

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்றிரவுக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளை கடந்த ஏப்ரல் 30 க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இசட் மதிப்பெண் கணக்கீடு இரட்டை சோதனை செயல்முறை காரணமாக அது ஒரு வாரம் தாமதமானது.

பரீட்சை திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப் படி பெறுபேறுகள் வெளியிடும் ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, அது இன்று வெளியிடப்படும். வெளியிடப்படும் முடிவுகளை கல்வியமைச்சின் www.doenets.lk என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம். வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களின்படி, 2020 உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படும். இசட்புள்ளி வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ugc.ac.lk இல் வெளியிடப்படும். மொத்தம் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பட்டங்களுக்கான பல்கலைக்கழக மாணவர்களை உள்ளெடுக்கும் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2021 ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை அக்ரோபருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, அக்டோபர் 4 முதல் 30 வரை தேர்வு நடைபெற உள்ளது.

அத்துடன் 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 2022 ஜனவரி இறுதி வாரத்தில் ஆரம்பித்து பெப்ரவரி முதல் வாரத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: