க.பொ.த உயர்தர பரீட்சை அனுமதி அட்டை அனுப்பும் நடவடிக்கை நிறைவு!

Friday, July 20th, 2018

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி பத்திரம் அனுப்பும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கப்பெறாத தனியார் பரீட்சாத்திகள் அவர்களின் தேசிய அடையாள அட்டையினை பயன்படுத்தி WWW.Donets.lk என்ற இயைத்தளத்தில் NEWS HEAD LINES என்ற தலைப்பின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 மற்றும் 0718 323658 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் அது தொடர்பில் அறிந்துகொள்ள முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர் தர பரீட்சை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை 2268 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: