க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!

கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளை பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும். அத்துடன் பாடசாலைப் பரீட்சார்த்தியின் பெறுபேறு பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு தபால்மூலம் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk அல்லது http://www.exams.gov.lkh என்ற இணைய முகவரிகளில் பார்வையிட முடியும்.
Related posts:
வளலாய் அமெரிக்கன் மிஷன் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!
கழிவுகள் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொரோனா அதிகரித்து சென்றாலும் நாட்டை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|