க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Tuesday, November 23rd, 2021க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்றையதியம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை தடை செய்யும் வர்த்தமானியை இரத்து செய்யும் வகையில் நேற்றிரவு அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வர்த்தமானி வெளியிட்டமை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்திருந்தார்.
அத்துடன், பீடைக்கொல்லி பதிவாளர் பதவியிலிருந்து கலாநிதி ஜே.ஏ.சுமித் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
Related posts:
சுகாதார அமைச்சை எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் உள்ளூராட்சிமன்ற...
|
|