கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் – நாட்டு மக்களிடம் புதிய சுகாதார அமைச்சர் வலியுறுத்து!
Monday, August 16th, 2021தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் என புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சு பதவிகளில் சில மாற்றங்கள் இன்றையதினம் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி சுகாதார அமைச்சானது கெஹலிய ரம்புக்வெலவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய சுகாதார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில், தற்போதுள்ள கோவிட் சூழ்நிலையை வெற்றி கொள்வது தொடர்பில் மக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அந்த பதிவில் மேலும், நான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பெருமை கொள்கிறேன்.
அதேவேளை இலங்கையில் கோவிட் – 19 தொற்று நிலமையை வெற்றி கொள்வதற்காக இதுவரையில் சிறப்பாக செயற்பட்ட பவித்ரா வன்னியாராச்சிக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
எப்படியிருந்தாலும், இந்த சவாலை தோற்கடிக்க அனைத்து குடிமக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம். இதை நனவாக்க இலங்கையில் உள்ள அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|