கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை – தெற்காசிய நாடுகளில் இலங்கையே முன்னணியில் – ஜனாதிபதி பெருமிதம்!

Sunday, July 18th, 2021

ஜனவரி மாதம் 28 ஆம் திகதியன்று, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது தொகுதி கிடைக்கப்பெற்றதுமுதல் – இதுவரையில் கிடைத்துள்ள அனைத்துத் தடுப்பூசிகள், மற்றும் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம், ஓகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் – 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் வழங்கி முடிக்க முடியுமென்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், “கண்டி ஸ்ரீ தலதா பெரஹராவுக்கு முன்னர், கண்டி மாவட்டத்தின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதநேரம் உலக சுகாதார நிறுவனம், எமது நாட்டின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுடன், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில், தெற்காசிய நாடுகளின் வரிசையில், இலங்கையே முன்னணியில் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆலோசனை சபையின் 11 ஆவது தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இதன்போது அவர் டீமலும் தெரிவிக்கையில் –

நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதானது எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகுமென்றும் இதன்போது ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் “கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது. உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள் கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தைத் தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.

இதன்போது – கொவிட் ஒழிப்புக்காக, ஆரம்பம் முதல், எமது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டங்களைப் பாராட்டிய மஹா சங்கத்தினர், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நோக்கங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டி, சமூகத்தில் பரவி வரும் பிழையான தகவல்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என்பதையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: