கோர விபத்து: 40 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

Wednesday, March 6th, 2019

கல்விச் சுற்றுலா வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கண்டி – மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கல்விச் சுற்றுலாவுக்காக அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனையிலிருந்து வந்த இந்த பேருந்து கடுகண்ணா பகுதியில் இரவு 9.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்து நடத்துனரே உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: