கோர விபத்தில் 3 பேர் பலி!

Friday, September 2nd, 2016

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.வான் ஒன்றும், பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் வானின் சாரதியும் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1472782767_8659670_hirunews_Accident-Dambulla

Related posts: